Thursday, May 2, 2024
Home » O/L, A/L முடித்த மாணவருக்கு தொழிற்பயிற்சி நெறிகள்

O/L, A/L முடித்த மாணவருக்கு தொழிற்பயிற்சி நெறிகள்

உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி - சுசில்

by damith
October 2, 2023 6:40 am 0 comment

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கிந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்காக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள தொழில்சார் பயிற்சி நெறிகள், உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் நாடளாவிய ரீதியில் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகள் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கல்விப்பொதுத் தராத சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்தப் பாடநெறிகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT