Thursday, May 16, 2024
Home » உழைப்பின் மகிமை பற்றி உத்தம நபிகள்!

உழைப்பின் மகிமை பற்றி உத்தம நபிகள்!

by gayan
September 28, 2023 5:55 am 0 comment

அன்றொரு நாள் நபி நாதர் தோழருடன்

அமர்ந்திருந்த வேளை யாங்கே

குன்றெனவே புயமுயர்ந்த ஜாம்பவான்

ஒருவர் வந்து தர்மம் கேட்டார்

நன்றலவே இவர் நல்ல பலமுடைய

உடலிருந்தும் இரந்து வாழ்தல்

என்று மனச் சஞ்சலமாய் மாநபிகள்

இழிதொழிலை வெறுத்தவாறு

சோதரரே! உங்களிடம் பணமுண்டா

என்ன நபி வினவக் கேட்டு

நீத முடை நபி முன்னே வந்த வரும்

ஐந்து திர்ஹம் எடுத்து வைத்தார்

தோழரிடம் அப்பணத்தைக் கொடுத்து நபி

சொன்னார்கள் கடைக்குச் சென்று

கோடரியும் கயிறுகளும் வாங்கி வந்து

கொடுங்கள் இவர் தொழில் நாட

கோடரியின் கணைதன்னை மாநபிதம்

பொற்கரத்தால் சீவி மாட்டிக்

காடு சென்று விறகு வெட்டிச்

சீவியுங்கள் சோதரரே என்று சொன்னார்

அண்ணல் நபி சொற்படியே விறகு வெட்டி

விற்று வந்த அவரோ பின்னர்

கண்ணியமும் கௌரவமும் பெற்றுயர்ந்த

பெருவாழ்வு கண்டார் அன்றே..

சுஐப் எம். காசிம்…?

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT