422
ரிட்ஸ்பரி கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கொழும்பு டி.எஸ்.
சேனநாயக்க கல்லூரியின் நெவிந்து லக்மன் கனிஷ்ட தேசிய சம்பியன் பட்டத்தையும் பெண்கள் பிரிவில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் சனித்மான சினாலே கனிஷ்ட தேசிய சம்பியன் பட்டத்தையும் வென்றனர்.
இரத்மலானை விமானப் படை ஸ்கொஷ் திடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) நிறைவடைந்த இந்தப் போட்டியில் பல்வேறு வயது மட்டங்களில் 450 வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதற்கு இலங்கையர்களின் அபிமானம் வென்ற சொக்லட் வர்த்தக நாமமான, சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின், ரிட்ஸ்பரி அனுசரணை வழங்கியது.