Home » பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

- கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் கோரிக்கை ஏற்பு!

by Rizwan Segu Mohideen
September 27, 2023 5:28 pm 0 comment

– அமைச்சரவை அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுப்பதாக பிரமர் உறுதி

கிழக்கு மாகாணத்தில் பல வருட காலமாக நிரந்த நியமனங்கள் வழங்கப்படாத நிலையில், கணிசமான பிரதேச சபை ஊழியர்கள் பணிபுரிகின்றனர் எனவும், அவர்களில் பலர் நிரந்தரமாக்குவதற்கான வயதெல்லையையும் தாண்டிய நிலையில் உள்ளனர் எனவும், நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கிழக்கு மாகாள ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதரிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநரின் கோரிக்கையை ஏற்ற பிரதமர், பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில், எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை அங்கீகாரம் பெற தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (26) செவ்வாய்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் அனைத்து மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய மாகாணங்களில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதமருக்கு விளக்கியபோதே குறித்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT