கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியின் நீளம் பாய்தல் போட்டி நிகழ்ச்சியில் பாலமுனை அல்–ஹிக்மா வித்தியாலய மாணவன் எம்.எச்.எம். நிப்றான் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
கந்தளாய் லீலாரத்ன விளையாட்டரங்கில் நடைபெறும் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றிய நிப்றான் 6.58 மீற்றர் தூரம் பாய்ந்து முதலிடத்தை பெற்றார்.
கடந்த வருடம் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினையும், மாகாண மட்டத்திலான சிறப்பு மெய்வல்லுநர் விருதினையும் நிப்றான் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பாலமுனை விசேட நிருபர்