ஹசிக ஜயசூரிய My Dentist Sri Lanka பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் குறித்து My Dentist Sri Lanka மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
ஹசிக ஜயசூரிய, தற்போது My Dentist Pvt லிமிடெட் இன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றுகிறார். அவர் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருந்து வருகிகிறார். இந்த மதிப்புமிக்க நிலைக்கு அவர் உயர்த்தப்பட்டமை அவரது அர்ப்பணிப்பு மற்றும் ஆழ்ந்த தொழில்துறைசார் திறனை பிரதிபலிக்கிறது என்று My Dentist Pvt Ltd பணிப்பாளர் அசந்த செபஸ்டியன் தெரிவித்துள்ளார்.
“மூலோபாய, செயல்பாட்டு திறன் மற்றும் வளரும் சந்தைகளில் வலுவான அனுபவம் என்பவற்றைக் கொண்ட ஹசிகவை பணிப்பாளராக நியமித்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் ஏற்கனவே இலங்கையில் 16 கிளினிக்குளை உருவாக்கியுள்ளோம். இன்னும் சிலவற்றை உருவாக்க எண்ணியுள்ளோம். 2023 இன் இறுதியில் மற்றும் 2024 இல் மாலைதீவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் எங்களை விஸ்தரிக்கவுள்ளோம். அதற்கு ஹசிகவின் திறன்கள் உதவுமென My Dentist பணிப்பாளர் சபை எதிர்பார்க்கின்றது” என்றும் செபஸ்டியன் தெரிவித்துள்ளார்.
ஹசிக ஜயசூரிய நிர்வாகத்தில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான விரிவான அனுபவத்தை கொண்டிருக்கிறார். சில்லறை விற்பனை, ஆற்றல் மற்றும் பல்வேறு தொழில்களில் சந்தைப்படுத்தல், சுகாதாரம். என்பனவற்றில் அவரது பரந்த அறிவு இலங்கை சந்தைக்கு மட்டுமல்லாது பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவுகள் மற்றும் நேபாளம் போன்ற பிராந்திய சந்தைகள் தொடர்பாகவும் விரிவடைந்ததாக உள்ளது.
ஹசிக ஐக்கிய இராச்சிய Anglia Ruskin University இல் பூகோள சந்தைப்படுத்தல் நடைமுறைகளில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். ICFAI பல்கலைக்கழகத்தில்- (இந்தியா) MBA பட்டம், லண்டன்- பல்கலைக்கழகத்தில் நிர்வாக விஞ்ஞானமாணி பட்டம் பெற்ற அவர் Institute of Certified Management Accountants-Australiaவின் சான்றளிக்கப்பட்ட Associate of Management Accountant என்ற மதிப்பிற்குரிய நிலையிலும் அவர் உள்ளார்.