Sunday, May 19, 2024
Home » அண்டார்டிக் கடல் பனியில் சாதனை அளவுக்கு வீழ்ச்சி

அண்டார்டிக் கடல் பனியில் சாதனை அளவுக்கு வீழ்ச்சி

by damith
September 18, 2023 1:23 pm 0 comment

அண்டார்டிகாவை சூழவுள்ள குளிர் கால கடல் பனி முன்னர் பதிவாகாத அளவுக்கு குறைவாக இருப்பதாக செய்மதி தரவுகள் காட்டுகின்றன. இது ஏற்கனவே உலக வெப்பமாதலால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தப் பிராந்தியம் புதிய சாதனை அளவை தொடும் என்று அஞ்சப்படுகிறது.

‘இது நாம் இதற்கு முன்னர் பார்த்ததற்கு அப்பால் பிரமிக்க வைக்கும் அளவுக்கு உள்ளது’ என்று தேசிய பனி மற்றும் பனித் தரவு மையத்தில் கடல் பனியை கண்காணிக்கும் வொல்டர் மீர் தெரிவித்துள்ளார். ஒரு நிலையற்ற அண்டார்டிகா எதிர்காலத்தில் விளைவுகளை ஏற்படுத்தும் என்று துருவ பிராந்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பூமியை குளிர்விக்கும் அண்டார்டிகாவின் பனி இல்லாத பட்சத்தில் அந்த பிராந்தியம் பூமியின் குளிர்சாதன பெட்டி என்ற நிலையில் இருந்து சூடேற்றியாக மாறிவிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அண்டார்டிக் பெருங்கடலின் மேற்பரப்பில் மிதக்கும் பனி இப்போது 17 மில்லியன் சதுர கி.மீற்றருக்கும் குறைவாகவே உள்ளது. அதாவது செப்டம்பர் சராசரியை விட 1.5 மில்லியன் சதுர கி.மீ கடல் பனி குறைவாக உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT