Monday, May 20, 2024
Home » எரிபொருள் நிலையங்களில் விரைவில் தானியங்கி பம்பிகள்

எரிபொருள் நிலையங்களில் விரைவில் தானியங்கி பம்பிகள்

அறவீட்டு உபகரணங்களை பொருத்தவும் ஏற்பாடு

by sachintha
September 15, 2023 9:43 am 0 comment

நாட்டிலுள்ள சகல எரிபொருள் நிலையங்களிலும் தானியங்கி எரிபொருள் பம்பிகள் மற்றும் பணம் அறவீட்டு உபகரணத்தை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் முதல் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தானியங்கி பம்பிகள் மற்றும் உபகரணம் பொருத்தப்பட்ட பின்னர், எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரும் நுகர்வோர், தமக்குத் தேவையான எரிபொருளை தாமே பெற்றுக் கொண்டு உரிய உபகரணத்தில் பணத்தை வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு விரைவாக எரிபொருள் முகாமைத்துவத்தை மேற்கொள்ளவும் அதற்கான தொகையை அறவிட்டுக் கொள்ளவும் வசதி ஏற்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதேவேளை,அடுத்த வருடம் முதல் எரிபொருள் விலைகள் தன்னியக்கமாக தினந்தோறும் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுடன் அமைச்சர் விசேட பேச்சு வார்த்தையொன்றை மேற்கொண்டுள்ளார்.இப்பேச்சுவார்த்தையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணித்தல், உராய்வு நீக்கிய எண்ணெய் சம்பந்தமான நடவடிக்கைகள் மற்றும் விற்பனை நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன் போது கருத்துப் பரிமாற்றங்கள் இடம் பெற்றுள்ளன.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT