Friday, May 3, 2024
Home » பழுதடைந்த கேக்கை விற்பனை செய்த பேக்கரி

பழுதடைந்த கேக்கை விற்பனை செய்த பேக்கரி

by Prashahini
September 14, 2023 3:15 pm 0 comment

பழுதடைந்த கேக் விற்பனை செய்ததாக வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றிற்கு எதிராக வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களிடம் நேற்று (13) முறைப்பாடு செய்யப்பட்டது.

வவுனியா, வைரபுளியங்குளம் பகுதியில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட அடைக் கேக் ஒன்றினை கொள்வனவு செய்தவர், குறித்த கேக் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக வவுனியா பொது பரிசோதகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டையடுத்து சுகாதார பரிசோதகர்கள் குறித்த சம்பவம் தொடர்பில் பரிசோதனைகளையும், விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா விசேட நிருபர்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT