Saturday, June 1, 2024
Home » நிலவுக்கு விண்கலம் அனுப்பியது ஜப்பான்

நிலவுக்கு விண்கலம் அனுப்பியது ஜப்பான்

by sachintha
September 8, 2023 5:17 pm 0 comment

ஜப்பான் நேற்று (7) முதல்முறையாக சந்திர மண்டலத்துக்கு விண்கலத்தை பாய்ச்சியுள்ளது. எச்2–ஏ ரக ‘மூன் ஸ்னைப்பர்’ விண்கலம், தனெகாஷிமா பகுதியிலிருந்து உள்ளூர் நேரப்படி சுமார் 8.42 மணியளவில் புறப்பட்டது.

சந்திர மண்டலத்தில் சுமார் 4 முதல் 6 மாதங்களில் அது தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 3 முறை இந்த விண்கலனைப் பாய்ச்சத் திட்டமிடப்பட்டபோதும் மூன்று முறையும் மோசமான வானிலை காரணமாக அது சாத்தியமாகவில்லை.

விண்கலன் பாய்ச்சப்படுவதை அந்நாட்டின் விண்வெளி ஆய்வு நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பியது. அதைச் சுமார் 35,000 பேர் பார்வையிட்டனர். ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகியவை உருவாக்கிய ஆய்வு செய்மதியும் விண்கலத்தில் இருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT