Sunday, May 19, 2024
Home » சீனப் பெருஞ்சுவரை இடித்தவர்கள் கைது

சீனப் பெருஞ்சுவரை இடித்தவர்கள் கைது

குறுக்கு வழி அமைக்க

by gayan
September 7, 2023 1:14 pm 0 comment

சீனாவின் வடக்கு ஷான்சி பிராந்தியத்தில் உள்ள சீனப் பெருஞ்சுவரில் இடைவெளியை அதிகரிப்பதற்கு அகழ்வு இயந்திரத்தை பயன்படுத்தி அதனை இடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய இருவர் பெருஞ்சுவரில் சீரமைக்க முடியாத அளவுக்கு சேதப்படுத்தி இருப்பதாக ஷான்சி கலாசார நினைவுச்சின்னங்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த இருவரும் தமது வேலைத் தளத்திற்கு செல்வதற்கான குறுகிய பாதையை அமைக்கும் வகையிலேயே பெருஞ்சுவரை சேதப்படுத்தியுள்ளனர்.

யுனெஸ்கோ உலக மரபுரிமை தலமாக இருக்கும் சீனப் பெருஞ்சுவர் கி.மு 220 தொடக்கம் கி.பி 1600களில் மிங் வம்சம் வரை நிர்மாணிக்கப்பட்டு அல்லது புனரமைக்கப்பட்டு வந்துள்ளது.

இதில் யுயு பகுதியில் அமைந்திருக்கும் மிங் பெருஞ்சுவரின் 32 ஆவது பெருஞ்சுவர் பகுதியிலேயே சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT