Monday, May 13, 2024
Home » தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த் திருவிழா

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த் திருவிழா

by Prashahini
August 28, 2023 10:44 am 0 comment

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று (28) இடம்பெற்றது.

அதிகாலை தேர்த் திருவிழாவுக்கான கிரியைகள் ஆரம்பமாகி காலை 7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை ஆரம்பமானது.

வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து துர்க்கையம்மன் சித்திரத் தேரில் எழுந்தருளினார்.

இதன்போது பலரும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் பொருட்டு விசேட வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதேவேளை நாளை (29) துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் காலை துர்க்கை அம்பாளின் தீர்த்தோற்சவமும், மாலை கொடியிறக்க உற்சவமும் நடைபெறவுள்ளது.

பருத்தித்துறை விசேட நிருபர்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT