Monday, May 20, 2024
Home » 117 நாடுகள் 166 போட்டியாளர்கள்; மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்குர்ஆன் போட்டி-2023

117 நாடுகள் 166 போட்டியாளர்கள்; மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்குர்ஆன் போட்டி-2023

by Rizwan Segu Mohideen
August 25, 2023 11:33 am 0 comment

வருடந்தோறும் நடைபெற்று வரும் மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்குர்ஆன் போட்டி மக்கா அல் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் இன்று (25) ஆரம்பமாகிறது.

சுமார் 117 நாடுகளைச் சேர்ந்த 166 போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் இப்போட்டி ஐந்து பிரிவுகளாக நடைபெற உள்ளது.நான்கு மில்லியன் ரியால் பரிசுத்தொகையில் முதல் பிரிவான 30 ஜுஸ்உக்கள் மனனப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டவருக்கு 5 இலட்சம் ரியால்கள் பரிசாக வழங்கப்பட வுள்ளன.

இப்போட்டியை சவூதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் வழிகாட்டலின் கீழ் சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சு இப்போட்டியை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை பூரணப்படுத்தி யுள்ளது.இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக வேண்டி இலங்கையில் இருந்தும் ஒரு போட்டியாளர் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் விமான டிக்கெட், மற்றும் தங்குவதற்குரிய ஹோட்டல் வசதிகள், மற்றும் உள்நாட்டு சுற்றுலாக்கள், புனித ஸ்தலங்களை தரிசித்தல் என்பவற்றை சவூதி அரசாங்கம் வழமை போன்று ஏற்பாடு செய்துள்ளது.கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆறுதல் பரிசில்களும், சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

போட்டியாளர்கள் பல வயதுடையவர்களாக இருப்பதால் சிறுவர்களை அழைத்துச் செல்வதற்கு மேலதிகமான ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வருடம் மேலதிகமாக 50 பேர்கள் மக்கா சென்றுள்ளனர்.இவ்வளவு பெருந்தொகை பணத்தை அல்-குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களுக்காக சவூதி அரேபியா அரசாங்கம் செலவு செய்கிறது.

மக்காவில் போட்டி முடிந்தவுடன் மதீனா சென்று, அங்கும் பல இடங்களை பார்வையிடுவதற்குறிய ஏற்பாடுகளை மன்னரின் வழிகாட்டலின் கீழ் சவூதி இஸ்லாமிய கலாச்சார அமைச்சு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தாருள் இமான் நிறுவன செயலாளர் அஷ்செய்க் பௌஸுல் அலவி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT