Monday, May 20, 2024
Home » கிரேக்கத்தில் காட்டுத் தீ: 18 அகதிகள் உயிரிழப்பு

கிரேக்கத்தில் காட்டுத் தீ: 18 அகதிகள் உயிரிழப்பு

by sachintha
August 24, 2023 11:13 am 0 comment

கிரேக்க தலைநகர் ஏதன்ஸுக்கு அருகில் துருக்கி நாட்டு எல்லையை ஒட்டிய எவ்ரோஸ் பிராந்தியத்தில் 20 உயிர்களை காவுகொண்ட காட்டுத் தீ கட்டுப்பாட்டை இழந்து தொடர்ந்து பரவி வருகிறது.

இதில் அண்மையில் எல்லையை கடந்து அலெக்சான்ட்ரோபோலிஸ் நகரின் வடக்கு வனப் பகுதியில் ஒளிந்திருந்த அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் 18 பேர் உயிரிழந்தவர்களில் உள்ளனர்.

துருக்கி எல்லைக்கு நெருக்கமாக இருக்கும் டடியா வனப் பகுதியில் இடம்பெற்றிருக்கும் உயிரிழப்புகளுக்கு கிரேக்கம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது.

ஐந்து நாட்களாக நீடித்துவரும் இந்த காட்டுத் தீயில் நகருக்கு அருகாமை பகுதிகள் மற்றும் கடற்கரையுடன் சேர்ந்த மேற்குப் பகுதி அழிந்துள்ளன. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

40 பாகை செல்சியஸை தொட்டிருக்கும் வெப்பம் மற்றும் கடுமையான காற்று தீயை மேலும் தீவிரமாக பரவச் செய்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் அகதிகள் மற்றும் தஞ்சக் கோரிக்கையாளர்கள் ஏற்கனவே கடலில் மூழ்கி உயிரிழப்புகளை சந்தித்திருக்கும் நிலையில் தற்போது காட்டுத் தீ ஆபத்துக்கும் முகம்கொடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT