Tuesday, May 21, 2024
Home » அதிவேக வீராங்கனையானார் அமெரிக்காவின் ரிச்சட்ஸன்

அதிவேக வீராங்கனையானார் அமெரிக்காவின் ரிச்சட்ஸன்

by sachintha
August 23, 2023 8:57 am 0 comment

புடபாஸில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியின் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஜமைக்காவின் முன்னணி வீராங்கனைகளை பின் தள்ளி அமெரிக்காவின் ஷாகர்ரி ரிச்சட்ஸன் வெற்றிபெற்றுள்ளார்.

திங்கட்கிழமை (21) நடைபெற்ற போட்டியில் ஆறாவது முறையாக சம்பியன் பட்டத்தை வெல்லும் முயற்சியில் களமிறங்கிய ஜமைக்காவின் ஷெல்லி ஆன் பிரேசர் பிரைஸை பின்தள்ளி ஷாகர்ரி போட்டித் தூரத்தை 10.65 விநாடிகளில் பூர்த்தி செய்து முதலிடத்தை பிடித்தார்.

இதில் ஜமைக்க வீராங்கனைகளான ஷெரிகா ஜக்சன் மற்றும் பிரேசர் பிரைஸ் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையே வென்றனர்.

முன்னதாக ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் 9.83 விநாடியில் போட்டித் தூரத்தை நிறைவு செய்த அமெரிக்காவின் நோவா லைல்ஸ் உலக சம்பியனானார்.

23 வயதான ரிச்சட்ஸன் மர்ஜுவான போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் இருந்து தடை செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT