Friday, May 17, 2024
Home » உணவகங்களில் திடீர் பரிசோதனை

உணவகங்களில் திடீர் பரிசோதனை

- மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மீட்கப்பட்டு அழிப்பு

by Prashahini
August 22, 2023 10:39 am 0 comment

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்.றயீஸ் வழிகாட்டலில் உணவே மருந்து- மருந்தே உணவு எனும் தொனிப்பொருளில் உணவகங்களில் திடீர் பரிசோதனைகள் இன்று (22) இடம்பெற்றது.

மேற்படி பரிசோதனைகள் தற்போதைய காலகட்டத்தில் ஹோட்டல்களின் தரத்தைப்பேணும் வகையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டன.

இதில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நீரில் கழுவாமல் வெட்டப்பட்ட வெங்காயம் மற்றும் சீர்குலைந்து காணப்பட்ட பாத்திரங்கள் மற்றும் ஒரு தடவை உபயோகித்த பின்னர் மீள்பாவனைக்காக வைக்கப்பட்ட எண்ணெய்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

எனவே, இவ்வாறான செயல்களை தடுக்கும்பொருட்டு மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதை கண்டால் மக்கள் விழிப்புடன் இருந்து 0672250834 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்.றயீஸ் பொதுமக்களை கேட்டுள்ளார்.

இப்பரிசோதனை நடவடிக்கையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி உட்பட பொது சுகாதார் பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆகியோரும் நடவடிக்கையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பாறுக் ஷிஹான்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT