Monday, May 20, 2024
Home » சவூதி கழகத்துடன் நெய்மர் இணைவு

சவூதி கழகத்துடன் நெய்மர் இணைவு

by gayan
August 17, 2023 12:41 pm 0 comment

பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மார் பிரான்ஸ் சம்பியனான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் இருந்து சவூதி அரேபியாவின் அல் ஹிலால் கழகத்தில் இணைந்துள்ளார்.

வீரர் பரிமாற்ற கட்டணமாக பாரிஸ் செயின்ட் ஜெர்மைனுக்கு 90 மில்லியன் யூரோ (98 மில். டொலர்) செலுத்த அல் ஹிலால் இணங்கியதாக செய்தி வெளியாகியுள்ளது. இது சவூதி லீக்கின் சாதனை தொகையாக பதிவாகியுள்ளது.

31 வயதான நெய்மாருக்கு இரண்டு ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதோடு அவரது வருடாந்த சம்பளமாக சுமார் 100 மில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளது. இது 38 வயதான ரொனால்டோவின் சம்பளத்தில் சுமார் பாதி அளவாகும்.

நெய்மார் பார்சிலோனாவில் இருந்து 2017 ஆம் ஆண்டு சாதனை தொகையான 222 மில்லியன் யூரோவுக்கு (242 மில். டொலர்) பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு ஒப்பந்தமாகி இருந்தார். அவர் அந்த அணிக்காக 173 போட்டிகளில் 118 கோல்களை பெற்றுள்ளார்.

சவூதி மற்றும் ஆசியாவில் மிகச் சிறந்த அணியாக உள்ள அல் ஹிலால் 66 கிண்ணங்களை வென்றிருப்பதோடு அதிக லீக் மற்றும் ஆசிய சம்பியன்ஸ் லீக் பட்டங்களை வென்ற அணியாக உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT