Tuesday, May 21, 2024
Home » இந்திய கடன் திட்டத்தில் கிழக்கில் சூரிய மின்கல தொகுதிகளை நிறுவ இணக்கம்

இந்திய கடன் திட்டத்தில் கிழக்கில் சூரிய மின்கல தொகுதிகளை நிறுவ இணக்கம்

by Rizwan Segu Mohideen
August 15, 2023 12:51 pm 0 comment

கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் கடன் உதவியின் கீழ் சூரிய மின்கலத் தொகுதிகளை நிறுவுவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இணக்கம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கும் இடையில் அவரது அமைச்சில் நேற்று(14) இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு இணக்கம் காணப்பட்டதாக, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சாலை வரைபடத்தைத் திட்டமிடுதல், இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் அரச அலுவலகங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள், மதத் தலங்களுக்கு இலவச சூரிய மின்கலத் தொகுதிகளை நிறுவுவதற்கு கஞ்சன விஜயசேகர இணக்கம் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர், மாகாண பிரதம செயலாளர், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரச அதிபர்கள், திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT