Monday, May 20, 2024
Home » சரத் பொன்சேகா உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

சரத் பொன்சேகா உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

by Prashahini
August 11, 2023 4:18 pm 0 comment

பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரத்நாயக்க தரிந்து அமில உடுவரகெதர உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

டீன்ஸ் வீதி, மருதானை வீதி (குலரத்ன மாவத்தை), ரீ.பி. ஜாயா மாவத்தை (டார்லி வீதி), ஒராபிபாஷா மாவத்தையிலிருந்து டெக்னிக்கல் சந்தி, ஒல்கோட் மாவத்தை ஊடாக கோட்டை புகையிரத நிலையம் வரையில் பேரணி ஒன்றை நடாத்துவதற்கு போராட்டக்காரர்கள் தயாராகி வருவதாக மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றவியல் வழக்குச் சட்ட விதிகளுக்கு அமைய அதனைத் தடை செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (11) நண்பகல் 12.00 மணி முதல் நாளை (12) நண்பகல் 12.00 மணி வரை, மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீன்ஸ் வீதி, மருதானை வீதி (குலரத்ன மாவத்தை), ரீ.பி. ஜாயா மாவத்தை (டார்லி வீதி), ஒராபிபாஷா மாவத்தை, மருதானையிலிருந்து டெக்னிக்கல் சந்தி, ஒல்கோட் மாவத்தையின் இறுதி வரை, பயணிகள் மற்றும் சாரதிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குறித்த வீதிகள் மற்றும்  நடைபாதைகளில் அதனை ஏனையோர் பயன்படுத்த முடியாத வகையில் மேற்கொள்ளும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிராக, பாகொட விஜித வங்ச தேரர், பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரத்நாயக்க முதியன்சேலாகே தரிந்து அமில உடுவரகெதர உள்ளிட்ட 11 பிரதிவாதிகள் மற்றும் அவர்களுடன் பங்குபற்றும் அனைத்து போராட்டக்காரர்களுக்கும் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதற்கமைய, இவ்வுத்தரவை மீறுவது இலங்கை தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ், தண்டனைக்குரிய குற்றம் என, குறித்த கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளததால், அவ்வாறானோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT