Monday, May 20, 2024
Home » ரி20 உலகக் கிண்ணம் அடுத்த ஆண்டு ஜூனில்

ரி20 உலகக் கிண்ணம் அடுத்த ஆண்டு ஜூனில்

by sachintha
July 31, 2023 4:19 pm 0 comment

 

அடுத்த ரி20 உலகக் கிண்ணப் போட்டி 2024 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உள்ள 10 மைதானங்களில் நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அமெரிக்காவின் சில மைதானங்களை சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் குழு ஒன்று இந்த வாரம் பரீட்சிக்கவுள்ளது. இந்நிலையில் போட்டியை நடத்தும் மைதானங்கள் பற்றிய இறுதி முடிவை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை மற்றும் அமெரிக்க கிரிக்கெட் சபையுடன் இணைந்து ஐ.சி.சி அடுத்த சில மாதங்களில் எடுக்கவுள்ளது.

20 அணிகள் பங்கேற்கவுள்ள ரி20 உலகக் கிண்ண போட்டிக்கு ஏற்கனவே 12 அணிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பிராந்திய ரீதியில் நடைபெறும் தகுதிகாண் தொடர்களின் மூலம் கடந்த வாரம் அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் பப்புவா நியு கினி அணிகள் தேர்வு பெற்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT