Monday, May 20, 2024
Home » சிறுவரின் படைப்பாற்றல், சேமிப்பை ஊக்குவிக்கும் உண்டியல் போட்டி

சிறுவரின் படைப்பாற்றல், சேமிப்பை ஊக்குவிக்கும் உண்டியல் போட்டி

by manjula
July 29, 2023 12:34 pm 0 comment

DFCC வங்கி அண்மையில் தனது Junior ஆக்கத்திறன் உண்டியல் போட்டியை நடத்தியுள்ளது. இப்போட்டியானது சிறுவர்களின் படைப்பாற்றலைத் தூண்டும் அதேவேளையில், சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இப்போட்டியில் பங்கேற்ற திறமைமிக்க சிறுவர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட சில தனித்துவமான மற்றும் ஆக்கபூர்வமான உண்டியல்கள் இங்கே காணப்படுகின்றன. DFCC Junior சிறுவர் சேமிப்புக் கணக்கு, DFCC வங்கியின் முதன்மையான சிறுவர் சேமிப்புக் கணக்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது சிறுவர்கள் சேமிப்பதன் மூலமாக உற்சாகமடைய உதவும் வகையில் ஏராளமான வெகுமதிகளையும், செயற்பாடுகளையும் அவர்களுக்கு வழங்குகிறது. DFCC வங்கி, இலங்கையின் எதிர்கால சந்ததியினரிடையே சேமிப்புப் பழக்கம் மற்றும் நிதியியல் பொறுப்பை ஊக்குவிப்பதில் உறுதியாக உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT