Tuesday, May 21, 2024
Home » அடுத்த வாரம் முட்டை விலை 50 ரூபாவை விடவும் குறையும்

அடுத்த வாரம் முட்டை விலை 50 ரூபாவை விடவும் குறையும்

by gayan
July 27, 2023 6:00 am 0 comment

முட்டை விலை அடுத்த வாரம் முதல் 50 ரூபாவை விட குறையுமென உற்பத்தியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, விநியோக வலையமைப்பு வீழ்ச்சியடைந்ததாக அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேக்கர குறிப்பிட்டார்.

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, விநியோகத்தில் முன்னேற்றம் ஏற்படு​ெமன எதிர்பார்க்கிறோம், இதனால் விலை குறையும்.

தேவைக்கேற்ப விலைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். கட்டுப்பாட்டு விலைகளை விதிக்கும் தீர்மானம் பற்றாக்குறையையே உருவாக்குமெனவும் அஜித் குணசேக்கர தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து, ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்து, நுகர்வோர் விவகார அதிகார சபையால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT