Monday, May 20, 2024
Home » சம்பியனானது ஒலுவில் இலவன் ஸ்டார் அணி

சம்பியனானது ஒலுவில் இலவன் ஸ்டார் அணி

by sachintha
July 26, 2023 4:36 pm 0 comment

துறைநீலவாணை மத்திய விளையாட்டுக் கழகம் நடாத்திய நாகேந்திரன் ஞாபகார்த்த மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

64 கழகங்கள் பங்கு கொண்ட இந்தத் தொடரின் இறுதிப் போட்டி துறைநீலாவணை மத்திய விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (22) இரவு நடைபெற்றது.

இலவன் ஸ்டார் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 39 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 32 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. இவ்வெற்றியின் மூலம் ஒலுவில் இலவன் ஸ்டார் அணி இரு தடவை நாகேந்திரன் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT