Monday, May 20, 2024
Home » ஜெயிலர்‌ திரைப்படத்தின்‌ 3ஆவது பாடல் வெளியீடு

ஜெயிலர்‌ திரைப்படத்தின்‌ 3ஆவது பாடல் வெளியீடு

by Prashahini
July 26, 2023 6:06 pm 0 comment

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் 3ஆவது பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


ஜெயிலர்‌ திரைப்படத்தின்‌ 3ஆவது பாடல் இன்று வெளியீடு (Update)

‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றுள்ள 3ஆவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அந்தவகையில் 3ஆவது பாடல் ‘ஜுஜுபி’ இன்று (26) மாலை 6 மணிக்கு அறிவித்ததை போன்று வெளியாகிறது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும், ஜெயிலர்‌ திரைப்படத்தின்‌ இசை வெளியீட்டு விழா 28 ஆம்‌ திகதி இடம்பெறும்‌ என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்‌, மழை காரணமாக பிற்போடப்பட்‌டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம்‌ அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT