Wednesday, May 15, 2024
Home » தலதா மாளிகைக்கு விஜயம் செய்த அழகிகள்

தலதா மாளிகைக்கு விஜயம் செய்த அழகிகள்

- செயற்கைக் கால் வழங்கும் நிகழ்விலும் பங்கேற்பு

by Prashahini
July 25, 2023 10:33 am 0 comment

உலக அழகி சுற்றுலா போட்டியாளர்கள் ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

‘மிஸ் வேர்ல்ட் டூரிஸம்’ (Miss World Tourism) போட்டியில் பங்கேற்கும் இலங்கை உட்பட 30 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் பெண்கள் கண்டி விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று (24) பிற்பகல் ஸ்ரீ தலதா மாளிகைக்கு இவ்வாறு விஜயம் செய்திருந்தனர்.

இதேவேளை, இலங்கை ரோட்டரி கழகம் அனுசரணையில் கண்டி குண்டசாலையில் அமைந்துள்ள வலது குறைந்தோர்களுக்கான மத்திய நிலையத்தில் சுமார் 50 சிறுவர் சிறுமியர்களுக்கு செயற்கை கால்கள் பொருத்தும் நிகழ்வு நேற்று (24) நடைபெற்றது.

இதில் Miss World Tourism போட்டியில் பங்கேற்கும் அழகு ராணிகள் கலந்து கொண்டு செயற்கை கால்களை வழங்கியிருந்தனர்.

தகவல்: அக்குறணை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT