Sunday, May 12, 2024
Home » கோடீஸ்வர தொழிலதிபர் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை

கோடீஸ்வர தொழிலதிபர் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை

by Rizwan Segu Mohideen
July 24, 2023 6:07 pm 0 comment

மோசடி மற்றும் போலியான ஆவணங்களை தயாரித்தமை தொடர்பில் சில நீதவான் நீதிமன்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கோடீஸ்வர தொழிலதிபரொருவர் தொடர்பில் விசேட விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்நாட்டின் பிரதான தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர் சபை அங்கத்தவராக இருந்து கொண்டு போலியான ஆவணங்களை தயாரித்தல் மற்றும் அந்நிறுவனத்தின் வாகனங்களை விற்பனை செய்து மோசடிகளை செய்த பல சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகின்ற கொழும்பு 06இல் வசிக்கும் நடராஜா தனராஜா எனும் “கணே~;” எனும் கோடீஸ்வ தொழிலதிபர் தொடர்பில் இவ்வாறு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றில் அறிவித்தனர்.

தான் பணிப்பாளர் பதவி வகிக்கும் தனியார் நிறுவனத்தின் பங்குகளை போலி ஆவணங்களை தயாரித்து இந்நபரால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பெபிலியான, பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வசிக்கும் வீரசிங்க முதலிகே ரொ~hன் வீரசிங்க அவர்களினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவு 01 இன் நிலைய பொறுப்பதிகாரி தலைமைப் பரிசோதகர் எஸ்.எஸ்.எம்.சாஜித் முன்னிலையில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

தனது தனியார் கம்பனியின் முன்னால் உரிமையாளரும், பங்குதாரருமான நடராஜா கனராஜாவின் அனைத்து பங்குகளையும் பஸ்லி அஹமட் எனும் வியாபாரிக்கு விற்பனை செய்துள்ளதாகவும், அவ்வாறான நிலையில் அவர், கான்சன எரிக் சிங்ஹாரகே என்பவருக்கு அதிகாரமளித்த, போலியான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் முறைபாடு தொடர்பில் தகவல்களை முன்வைத்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இம்மோசடி தொடர்பில் பஸ்லி அஹமட் அஸார் அவர்களினால் நடராஜா கனராஜா என்பவருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வணிக விசாரணை பிரிவின் 04ம் பகுதிக்கு முறைபாடு செய்யப்பட்டதன் பின்னர் குளியாபிட்டிய நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நீதிமன்றில் தகவல் முன்வைக்கப்பட்டது.

அதனடிப்படையில், இந்நபர் தொடர்பில் இவ்வாறு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் “பி” அறிக்கையின் ஊடாக நீதிமன்றத்திற்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.

நடராஜா கனகராஜா அவர்களினால் தல்கஹபொத்த வீதி, பிபிலன்தெனிய, உடுபெத்தேவ பகுதியில் தேங்காயெண்ணெய் மொத்தமாக பெற்று சுத்திகரித்து விநியோகிக்கும் நிறுவனமொன்று கொண்டு நடாத்தப்படுவதுடன், இவருக்கு எதிராக பல நிதிமோசடி வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், அவற்றில் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவ்வாறான 04 வழக்குகளும், குளியாப்பிட்டிய மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் 15 வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவரால் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிதிமோசடிகளின் பெறுமதி 750 மில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இவருக்கு சில நீதிமன்றங்களில் பிணை வழங்கி விடுவித்துள்ளதாகவும், அவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் வெளிநாட்டு தடையுத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது.

நடராஜா என்பவர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களினூடாக வழங்கப்படுகின்ற கடன் அட்டைகள் ஊடாகவும் பாரியளவிலான நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

கணகராஜா இலங்கை மற்றும் இந்தியாக ஆகிய இரு நாடுகளிலும் பிரஜாவுரிமை கொண்டவர் என்பதும் விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவரது பிள்ளைகள் இந்தியாவில் வாழ்வதாகவும் அந்நாட்டில் அவருக்கு குறிப்பிடத்தக்களவு சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அவர் 1994.02.01 முதல் 2019.07.19 வரையிலான காலப்பகுதியினுள் பல்வேறு பதவிகள் மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி விமான அனுமதிப்பத்திரங்கள் 10 இணை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT