Tuesday, May 14, 2024
Home » ஆசிய கிண்ணம் 2023 போட்டித் தொடர் அட்டவணை வௌியீடு

ஆசிய கிண்ணம் 2023 போட்டித் தொடர் அட்டவணை வௌியீடு

- ஓகஸ்ட் 30 - செப்டெம்பர் 17 வரை போட்டிகள்

by Rizwan Segu Mohideen
July 19, 2023 8:48 pm 0 comment

–  இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப்டெம்பர் 02 கண்டியில்
– சுப்பர் 4 சுற்றில் ஒரு போட்டி தவிர்ந்த ஏனைய போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி கொழும்பில்

2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் ஓகஸ்ட் 30 – செப்டெம்பர் 17ஆம் திகதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இப்போட்டித் தொடர் இடம்பெறவுள்ளது.

இலங்கையில் 9 போட்டிகளும் பாகிஸ்தானில் 4 போட்டிகளும் இடம்பெறவுள்ளதோடு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி, செப்டெம்பர் 02 இல் கண்டியின் பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அது தவிர கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்திலும் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, பாகிஸ்தானில் லாஹூர் மற்றும் முல்தான் விளையாட்டரங்குகளில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

குழு A
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம்

குழு B
இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்

முதல் 4 இடத்தை பிடிக்கும் அணிகள் பங்குபற்றும் சுப்பர் 4 சுற்று செப்டெம்பர் 06 இல் ஆரம்பமாகின்றது. இதில் ஒரு போட்டி மாத்திரம் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளதோடு, ஏனைய போட்டிகள் கொழும்பில் இடம்பெறவுள்ளன.

தொடரின் இறுதிப் போட்டி செப்டெம்பர் 17ஆம் திகதி இலங்கையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Asia Cup 2023 Fixtures

DATE GROUP STAGE VENUE
30-AUG PAKISTAN v NEPAL MULTAN, PAK
31-AUG BANGLADESH v SRI LANKA KANDY, SL
2-SEP PAKISTAN v INDIA KANDY, SL
3-SEP BANGLADESH v AFGHANISTAN LAHORE, PAK
4-SEP INDIA v NEPAL KANDY, SL
5-SEP AFGHANISTAN v SRI LANKA LAHORE, PAK
SUPER 4s
6-SEP A1 v B2 LAHORE, PAK
9-SEP B1 v B2 COLOMBO, SL
10-SEP A1 v A2 COLOMBO, SL
12-SEP A2 v B1 COLOMBO, SL
14-SEP A1 v B1 COLOMBO, SL
15-SEP A2 v B2 COLOMBO, SL
17-SEP FINAL COLOMBO, SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT