Saturday, May 11, 2024
Home » கடலை பருப்பு எனும் பெயரில் 39 ஆயிரம் கி.கி. உளுந்து கடத்தல்

கடலை பருப்பு எனும் பெயரில் 39 ஆயிரம் கி.கி. உளுந்து கடத்தல்

- ரூ. 7.8 மில்லியன் வரி மோசடி முறியடிப்பு

by Prashahini
July 13, 2023 11:23 am 0 comment

கடலை பருப்பு எனும் பெயரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 39 ஆயிரம் கி.கி. உளுந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

கண்டி பிரதேசத்தில் அமைந்துள்ள Goraline Impext Pvt Ltd எனும் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு கொள்கலன்கள் சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை வருமான கண்காணிப்பு
திணைக்கள அதிகாரிகளினால் நேற்று (12) சோதனையிடப்பட்ட போது சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய முயற்சித்த குறித்த உளுந்து தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கொள்கலன்களிலும் 48,000 கிலோ கிராம் கடலை பருப்பு உள்ளதாக குறித்த நிறுவனத்தினால் கூறப்பட்டாலும், அதில் 9,000 கிலோ கிராம் மட்டுமே கடலை பருப்பு இருந்ததாகவும், 39,000 கிலோ கிராம் உளுந்து காணப்பட்டதாக, சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட பணிப்பாளரும் அதன் ஊடகப் பேச்சாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்.

இந்த உளுந்தின் சந்தைப் பெறுமதி ரூ. 62,400,000 எனவும், சுங்கப் பிடியில் சிக்காமல் கையிருப்பு விடுவிக்கப்பட்டிருந்தால் அரசாங்கத்திற்கு ரூ. 7,800,000 வரி வருமான இழப்பு ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுங்கத்துறை வருமான கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு, விசாரணை முடிவில் அனைத்து பொருட்களும் அரசுடமையாக்கப்பட்டு,
சந்தேகநபருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT