Monday, May 20, 2024
Home » போரால் பாதிக்கப்பட்டோர் மீள்குடியேற்றம்

போரால் பாதிக்கப்பட்டோர் மீள்குடியேற்றம்

-கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை

by Prashahini
July 12, 2023 10:36 am 0 comment

அம்பாறை கனகர் கிராமத்தில் போரால் பாதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கையை நேற்று (11) காலை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முன்னெடுத்துள்ளார்.

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் 1987 ஆம் ஆண்டு நாட்டி நடைபெற்ற உச்ச யுத்தத்தின்போது இராணுவத்தினரால் பலவந்தமாக கனகர் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட, போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கை
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக்காணியில் அம்மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான சுத்திகரிப்பு வேலைத்திட்டம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் அவர்களின் கோரிக்கையின் பேரில்
உள்ளுராட்சி அமைப்புகள் மற்றும் IBC ஊடக தலைவர் திரு.பாஸ்கரன் ஆகியோரின் ஆதரவுடன் நடைபெற்றது.

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக இந்தப் புனர்வாழ்வுக் கிராமத்தை அமைப்பதில் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் அவர்கள் அர்ப்பணிப்புடன் பங்காற்றியிருந்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஆளுநரின் செயலாளர், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், அம்பாறை மாவட்ட அரச திணைக்களத் தலைவர்கள்,
ஆளுநர் அலுவலக உயரதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் காணிச்சொந்தக்காரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட கட்டிடங்களையும், பொதுமக்களின் கட்டிடங்களையும், சேதமாக்கப்பட்ட கட்டிடங்களையும் பார்வையிட்டதுடன் இது சம்பந்தமான முழுமையான அறிக்கைகளையும் ஜனாதிபதிக்கு அனுப்பி துரிதகதியில் இப்பிரதேச மக்களை மீண்டும்
மீள்குடியேற்றுவதற்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இதன்போது நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT