Wednesday, May 15, 2024
Home » சமுர்த்தி சௌபாக்கியா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு புதிய வீடுகள்

சமுர்த்தி சௌபாக்கியா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு புதிய வீடுகள்

by Prashahini
July 12, 2023 10:28 am 0 comment

நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவில் வருமானம் குறைந்த குடும்பத்தவர்களுக்கு சமுர்த்தி சௌபாக்கியா வீடமைப்புத்திட்டத்தின் மூலம் புதிய வீடுகளை நிர்மாணித்து கையளிக்கும் நிகழ்வு நேற்று (11) தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி. அன்வர் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் நிந்தவூர் 23 ஆம் பிரிவில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக புதிதாக கடமையேற்ற சிந்தக்க அபேவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டுவீடுகளை பயனாளிகளிடம் சம்பிரதாய பூர்வமாக கையளித்தார்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி மூலம் நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள தெரிவு செய்யப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் இவ்வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள
மூன்று புதிய வீடுகள் இதன்போது பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியினைக் கொண்டும் பயனாளிகளின் பங்களிப்பினைக் கொண்டும் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ்; கௌரவ அதிதியாகவும், விஷேட அதிதிகளாக நிர்வாக உத்தியோகத்தர் எம்.ரி.எம்.சரீம், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.பைரூஸ், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.பி.எம்.ஹூசைன், திட்ட முகாமையாளர் யூ.எல்.றஹ்மத்துல்லாஹ், சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான சு.வசந்தகுமார், ஏ.பி.எம்.இக்ராம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.அப்துல் லத்தீப் உள்ளிட்ட துறைசார் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT