Friday, May 17, 2024
Home » பெருவில் அதிகரித்து வரும் அரிய வகை நோய்

பெருவில் அதிகரித்து வரும் அரிய வகை நோய்

- 90 நாட்களுக்கு அவசரகால சுகாதார நிலை பிரகடனம்

by Rukshy Vinotha
July 11, 2023 12:37 pm 0 comment

தென் அமெரிக்க நாடான பெருவில்  Guillain Barre Syndrome என்கிற அரிய வகை நோய் அதிகரித்து வருவதால், அந்நாட்டில் அடுத்த 90 நாட்களுக்கு அவசரகால சுகாதார நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பெருவில் இதுவரை 165 பேருக்கு  உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் 4பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குய்லேன் பார் சிண்ட்ரம் என்ற இந்த அரிதான நோய் ஏற்படுகிறபோது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நரம்பு மண்டலத்தை தாக்குகிறது.

இதனால் தசை பலவீனம் அடைகிறது. இந்த நோய் வந்தால் கால்கள் மற்றும் கைகள் தான் முதலில் பாதிக்கப்படும்.

கை, கால், உடல் பகுதிகளில் உணர்வற்ற நிலை, பலவீனம், வலி ஆகியவை ஏற்படும். மெல்ல இவை மார்பு மற்றும் முகத்துக்கு பரவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த நோய்க்கு என்று தனியாக சிகிச்சை இல்லை என்றும் வெளிப்படும் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சையளித்தால் நோயின் தீவிரத்தையும் காலத்தையும் குறைக்க முடியும்.

மேலும் இந்நோய் எல்லா வயதினரையும் பாதிக்கக்கூடியதாக இருப்பதால், மிக கவனமுடன் இதை கையாள மருத்துவர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT