Tuesday, May 21, 2024
Home » ‘இந்து’க்களின் சமரில் சம்பியனாக மகுடம் சூடியது யாழ். இந்து கல்லூரி

‘இந்து’க்களின் சமரில் சம்பியனாக மகுடம் சூடியது யாழ். இந்து கல்லூரி

by admin
July 4, 2023 9:43 am 0 comment

கொழும்பு இந்து கல்லூரிக்கு எதிரான 12ஆவது இந்துக்களின் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியது. பீ. சரா ஓவல் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (01) நிறைவடைந்த இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் கே. பரஷித் பெற்ற அரைச்சதத்தின் (80) உதவியோடு யாழ். இந்து கல்லூரி முதல் இன்னிங்ஸில் 180 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் கொழும்பு இந்து கல்லூரியை 49 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த முடிந்தது. இதன்போது அபராமாக பந்து வீசிய ரீ. கஜனாத் 5 விக்கெட்டுகளையும் கே. தரணிசன் 3 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸுக்கு பலோ ஓன் செய்த கொழும்பு இந்து 170 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இந்நிலையில் யாழ். இந்து கல்லூரிக்கு 37 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஒரு விக்கெட்டை இழந்து அந்த இலக்கை எட்டியது. இதன்மூலம் அந்த கல்லூரி 4ஆவது முறையாக இந்துக்களின் பெருஞ்சமரில் வெற்றியை பதிவு செய்தது.

தெஹிவளை கல்கிசை விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT