ஜப்பானுக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ணத் தொடரின் முதல் குழுநிலை போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டியது.
டுபாயில் நேற்று முன்தினம் (09) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஜப்பான் அணி 30.3 ஓவர்களில் 75 ஓட்டங்களுக்கே சுருண்டது.
பந்துவீச்சில் மல்ஷ தருப்பதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு கருக சங்கேத் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் பதிலெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி 12.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 76 ஓட்டங்களை எட்டியது. அதிகபட்சமாக அணித் தலைவர் சினெத் ஜனவர்தன ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களை பெற்றார்.
எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இளையோர் ஆசிய கிண்ணப் போட்டியில் பி குழுவில் ஆடும் இலங்கை அணி இன்று (11) தனது இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்கொள்ளவுள்ளது.