206
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மன்றக்கல்லூரியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அவசர அரசியல் குழுக்கூட்டம் நேற்றுக் காலை நடைபெற்றது.
இந்த அவசரக் கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்றிருந்தார்.
இதன்போதே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமிக்கப்பட்டார்.