Sunday, May 19, 2024
Home » ICC விருதுக்கு கமிந்து பரிந்துரை

ICC விருதுக்கு கமிந்து பரிந்துரை

by Gayan Abeykoon
April 5, 2024 1:26 pm 0 comment

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சோபித்து தொடர் நாயகன் விருதையும் வென்ற இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ்
சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் மார்ச் மாதத்தின் சிறந்த வீரருக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் அடைர் மற்றும் நியூசிலாந்தின் மெட் ஹென்ரியுடன் இந்த விருதை வெல்ல அவர் போட்டியிடுகிறார்.

பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் கணிசமான ஓட்டங்களை பெற்ற 25 வயதான கமிந்து மெண்டிஸ் அந்த அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்றார். தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களை பெற்ற அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச்சிலும் 3 விக்கெட்டுகளை விழ்த்தினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT