Monday, May 20, 2024
Home » அஸ்வெசும: தமிழ், சிங்கள புத்தாண்டுக்குள் நிலுவைகள்

அஸ்வெசும: தமிழ், சிங்கள புத்தாண்டுக்குள் நிலுவைகள்

by sachintha
April 2, 2024 6:50 am 0 comment

சகல நடவடிக்கைகளும் பூர்த்தி என்கிறார் இராஜாங்க அமைச்சர்

 

நாட்டின் நான்கு மாவட்டங்களில் இதுவரை அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் கிடைக்காத அனைவருக்கும் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன் நிலுவை பணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நுவரெலியா, பதுளை, காலி மற்றும் பொலன்னறுவை ஆகிய 4 மாவட்டங்களில் அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் கீழ் 2500 ரூபாவைப் பெற்றுக் கொள்வதற்கு உரிமை பெற்றுள்ளவர்களுக்கு இந்நிதி வழங்கப்படவுள்ளது. சில சிக்கல்கள் காரணமாக இதுவரை இவர்களுக்கு அந்நிதி வழங்கப்படவில்லை. அந்தவகையில் எதிர்வரும் புதுவருடத்துக்கு முன், அதனை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

மேற்படி மாவட்டங்களில் அஸ்வெசும கொடுப்பனவுக்காக பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட போது, குறைந்த புள்ளிகளைப் பெற்றுக் கொண்டுள்ள பெருமளவு மக்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமையால் அந்த மாவட்டங்களுக்கு உரித்தான கோட்டா உயர் மட்டத்தில் காணப்பட்டது. இதனால், இந்த பிரச்சினை எழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு கண்டு, அவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அதேவேளை, அஸ்வெசும கொடுப்பனவு ஆரம்பிக்கப்பட்ட 2023 ஜூலை மாதத்திலிருந்து இதுவரை காலமும் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளாத அனைவருக்கும் அதனை நிலுவையுடன் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.அஸ்வெசும கொடுப்பனவு சபை தம்மோடு நடத் திய பேச்சுவார்த்தையில் இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT