Friday, May 31, 2024
Home » Women Plus Bazaar 2024 கண்காட்சியில் கௌரவ அதிதியாக வட மாகாண ஆளுநர்

Women Plus Bazaar 2024 கண்காட்சியில் கௌரவ அதிதியாக வட மாகாண ஆளுநர்

by mahesh
March 27, 2024 2:00 pm 0 comment

இலங்கைக்கான எகிப்து தூதரகத்தால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட Women Plus Bazaar 2024 கண்காட்சியில் கௌரவ அதிதியாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கலந்து கொண்டார். இக்கண்காட்சி 23ஆம் திகதி ஆரம்பமாகி 24ஆம் திகதிவரை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை நடைபெற்றது. கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள One Galle Face சிறப்பு அங்காடி தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சிக் கூடத்தை, ஏனைய அதிதிகளுடன் இணைந்து வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸும் ஆரம்பித்து வைத்தார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். பின்னர் அவர்கள் கண்காட்சிக் கூடத்தையும் பார்வையிட்டனர்.

நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்களின் உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் பெண் தொழில் முனைவோரை இலக்காகக் கொண்டு இந்த கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT