Saturday, June 1, 2024
Home » வெள்ளவத்தை பகுதி ஆடையகத்தில் பாரிய தீ

வெள்ளவத்தை பகுதி ஆடையகத்தில் பாரிய தீ

உயிர்ச் சேதங்கள் கிடையாது என பொலிஸார் தெரிவிப்பு

by damith
March 25, 2024 6:00 am 0 comment

கொழும்பு வெள்ளவத்தை நகரில் பிரபல தனியார் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று மாலை பாரிய தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தீப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் 10 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பல மணித்தியாலங்கள் தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்

இந்த தீ அனர்த்தத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

தீயணைப்பு படையினருடன் இணைந்து பொலிசார் மற்றும் பிரதேச வாசிகள் தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும்மேற்படி தீ அனர்த்ததையடுத்து வெள்ளவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

தீப் பரவலுக்கான காரணம் மற்றும் சேதங்கள் தொடர்பில் உடனடியாக தகவல்களை வழங்க முடியாதுள்ளதாகள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பாரிய பிரயத்தனத்திற்கு மத்தியில் ஆடையகத்திலிருந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT