Monday, May 20, 2024
Home » பொதுநலவாய போட்டிகளை மலேசியா ஏற்று நடத்த மறுப்பு

பொதுநலவாய போட்டிகளை மலேசியா ஏற்று நடத்த மறுப்பு

by Rizwan Segu Mohideen
March 24, 2024 8:14 am 0 comment

மலேசியா 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்தப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

செலவின் காரணமாக அந்த முடிவு எடுக்கப்பட்டதாக மலேசிய அரசாங்கம் கூறியது. பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதிகரிக்கும் செலவுகளால் கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் பொதுநலவான போட்டியை ஏற்று நடத்த முடியாது என்று கூறியது. அதனை அடுத்து அந்தப் பொறுப்பை எந்த நாடு ஏற்கும் என்ற கேள்வி நிலவுகிறது.

பொதுநலவாய விளையாட்டுகளுக்கான சம்மேளனம், போட்டிகளை ஏற்று நடத்தும் நாட்டுக்கு 125 மில்லியன் டொலர் வழங்கவிருப்பதாக அறிவித்தது. எனினும் பெரிய அளவிலான விளையாட்டு நிகழ்ச்சிக்கான செலவுக்கு அது போதாது என்று மலேசிய அரசாங்கம் குறிப்பிட்டது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT