Monday, May 20, 2024
Home » இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக ஆகிப் நியமனம்

இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக ஆகிப் நியமனம்

by damith
March 18, 2024 10:41 am 0 comment

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவிட் இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணம் முடியும் வரை அவர் இலங்கை அணியுடன் பணியாற்றவுள்ளார்.

ஆகிப் ஜாவிட் பாகிஸ்தான் தேசிய அணிக்காக 163 ஒருநாள் மற்றும் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 236 விக்கெட்டுகளை ஒட்டுமொத்தமாக வீழ்த்தியுள்ளார். 1992ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற பாகிஸ்தான் அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். அவர் இதற்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டதுடன், ஐக்கிய அரபு இராச்சிய அணியின் பயிற்சியாளராகவும், ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அபிவிருத்திக்கான பொறுப்பொன்றிலும் செயற்பட்டுள்ளார். இவர் தற்போது பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் லாஹூர் கெலண்டர்ஸ் அணியின் பணிப்பாளர் மற்றும் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT