Friday, May 17, 2024
Home » சிப் அபகஸ், மன எண்கணிதப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற சபி அஹமட்

சிப் அபகஸ், மன எண்கணிதப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற சபி அஹமட்

by Rizwan Segu Mohideen
March 15, 2024 3:24 pm 0 comment

பிராந்திய ரீதியில் நடைபெற்ற சிப் அபகஸ் மற்றும் மன எண்கணிதப் போட்டியில் (SIP Abacus & Mental Arithmetic Competition) அக்கரைப்பற்று அப்துல் ஹமீட் சபி அஹமட் சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

அக்கரைப்பற்று கனிஷ்ட கல்லூரியில் தரம் 04 இல் கல்வி கற்கும் அப்துல் ஹமீட் சபி அஹமட் அக்கரைப்பற்று, காத்தன்குடி, மட்டக்களப்பு போன்ற இடங்களை உள்ளடக்கி பிராந்திய ரீதியாக காத்தான்குடி மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற சிப் அபகஸ் மற்றும் மன எண்கணிதப் போட்டியில் சம்பியன் பட்டத்தை பெற்று அபகஸ் கற்பித்த ஆசிரியர்களுக்கும், பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த வருடம் (2023) தேசிய ரீதியில் நடைபெற்ற அபகஸ் போட்டியில் இவர் மூன்றாம் இடத்தைப் பெற்று (Second Runner up) சாதனை படைத்திருந்தார். இம்மாணவர் அக்கரைப்பற்று அப்துல் ஹமீட், சுல்ஹாபானு ஆகியோரின் புதல்வர் ஆவார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT