Home » டைம் அவுட் கொண்டாட்டம்; பங்களாதேஷ் அணித் தலைவரின் கருத்து

டைம் அவுட் கொண்டாட்டம்; பங்களாதேஷ் அணித் தலைவரின் கருத்து

- முதலில் ஆரம்பித்தது யார் என இலங்கை இரசிகர்கள் கேள்வி

by Rizwan Segu Mohideen
March 11, 2024 3:18 pm 0 comment

பங்களாதேஷுக்கு எதிரான ரி20 தொடரை கைப்பற்றிய இலங்கை வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் சர்ச்சைக்குரிய ‘டைம் அவுட்’ சமிக்ஞையை காண்பித்த நிலையில், அதனை கைவிடும்படி பங்களாதேஷ் அணித்தலைவர் நஜ்முல் ஹொஸைன் ஷான்டோ கேட்டுள்ளார்.

‘அவர்கள் டைம் அவுட் சம்பவத்தில் இருந்து இன்னும் வெளியேறவில்லை. அவர்கள் அதில் இருந்து வெளியேறி நிகழ்காலத்துக்கு வர வேண்டும்’ என்று ஷான்டோ கூறியதாக cricinfo இணையத்தளம் குறிப்பிட்டது.

இருப்பினும் நாம் எமது பாணியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டோம் என்று இலங்கை அணி வீரர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

ஆயினும் இத்தொடரில் டைம் அவுட் விடயத்தை பங்களாதேஷ் அணியின் ஷொரிபுல் இஸ்லாமே ஆரம்பித்திருந்தால், முதலில் பங்களாதேஷ் அணியே இதனை ஆரம்பித்ததாக இலங்கை இரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த உலகக் கிண்ணத்தில் அஞ்சலோ மத்தியூஸுக்கு எதிராக பங்களாதேஷ் அணி டைம் அவுட் முறையில் அட்டமிழப்பு பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT