Monday, May 20, 2024
Home » உய்குர் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களை முன்னிலைப்படுத்தி இலண்டனில் நிகழ்வு

உய்குர் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களை முன்னிலைப்படுத்தி இலண்டனில் நிகழ்வு

by Rizwan Segu Mohideen
March 8, 2024 7:28 pm 0 comment

ரெனி கசின் மன்றம் (Rene Cassin Foundation) மற்றும் பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான நம்பிக்கை மற்றும் வன்முறைக்கு எதிரான கூட்டணி (Faith and Violence Against Women and Girls Coalition) போன்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக அமைப்புகள், உய்குர் பெண்களை துன்புறுத்துவதை வலியுறுத்தி இலண்டனில் ஒரு நிகழ்வொன்றை ஒழுங்கு செய்ததாக சமூக அமைப்புகள் வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட மனித உரிமைகள் குழுவான ரெனே கசின் மன்றம் மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான நம்பிக்கை மற்றும் வன்முறை (FVAWG) கூட்டணி ஆகியவை இந்த நிகழ்வை நடத்தியிருந்தது. உய்குர் பெண்களுக்கு எதிரான நம்பிக்கையை ஆயுதமாக்குதல் என்ற தலைப்பில், மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த செய்தி அறிக்கை மேலும் கூறப்பட்டதாவது, “பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மத துன்புறுத்தல்களுக்கு எதிராக அனைத்து பெண்களையும் ஒற்றுமையுடன் கைகோர்ப்பதற்கு நாங்கள் ஊக்குவிக்கிறோம். சீனாவில் உய்குர் பிராந்தியத்தில் உய்குர்களும் ஏனைய முஸ்லிம் சிறுபான்மையினரும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். மில்லியன் கணக்கான உய்குர்கள் பரந்த முகாம் வலையமைப்பில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். உய்குர் கைதிகள், முகாம்களுடன் இணைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளிலும், உலகம் முழுவதும் உள்ள ஆடை உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் பருத்தி வயல்களிலும், அடிமைத் தொழிலாளிகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “உய்குர் பெண்களுக்கு மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம் மறுக்கப்படுகிறது. பெண்கள் மார்க்கத்தை கற்றல் மற்றும் மதக் கூட்டங்கள், தினசரி பிரார்த்தனை மற்றும் ஹிஜாப் அணிவது ஆகியவை வெளிப்படையாக குற்றமாக்கப்பட்டுள்ளன”

உய்குர் பெண்களின் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் மறுப்பது, உய்குர் பெண்களின் உரிமைகளை மீறும் துஷ்பிரயோகம் என்பதைப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இதில் பாலின அடிப்படையிலான வன்முறை தடுப்புக்காவல், கட்டாய கருத்தடை மற்றும் கருக்கலைப்பு மற்றும் கட்டாய திருமணம் ஆகியவை அடங்கும். சர்வதேச மகளிர் தினத்தை நாம் குறிக்கும் போது, உய்குர் இனப்படுகொலையின் நம்பிக்கை மற்றும் பாலினம் சார்ந்த அம்சங்கள் மற்றும் குறிப்பாக உய்குர் பெண்கள் மீதான அதன் தாக்கம் ஆகியவற்றுக்கு இடையேயான குறுக்குவெட்டை ஆராய வேண்டும்.

ரெனி கசின் மன்றம் – சர்வதேச மனித உரிமைகள் நிறுவனம் 1969 முதல் உலகெங்கிலும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மூலம் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பின் பேச்சாளர் ரேச்சல் ஹாரிஸ் சீனா மற்றும் மத்திய ஆசியா மற்றும் குறிப்பாக உய்குர்களை மையமாகக் கொண்ட ஆய்வுகளை செய்துள்ளார். மற்றொரு பேச்சாளரான ரஹிமா மஹ்முத் இலண்டனைச் சேர்ந்த பாடகி, மொழிபெயர்ப்பாளர், மனித உரிமை ஆர்வலர் மற்றும் பேச்சாளர். அவர் கஜகஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள குல்ஜாவில் பிறந்தார். மனித உரிமைகள் வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் இனப்படுகொலைப் பதிலுக்கான கூட்டணியின் இணை நிறுவனராகவும் செயற்படுகிறார். (ANI)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT