Monday, May 20, 2024
Home » ஹெய்ட்டியில் 4000 கைதிகள் தப்பியோட்டம்

ஹெய்ட்டியில் 4000 கைதிகள் தப்பியோட்டம்

by manjula
March 5, 2024 3:42 pm 0 comment

ஹெய்ட்டியின் இரு பிரதான சிறைச்சாலைகள் மீது குற்ற கும்பல்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 4,000 கைதிகள் தப்பிச் சென்றதை அடுத்து அந்நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 72 மணி நேர அவசர நிலை அறிவிக்கப்பட்டிருப்பதோடு ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் பிரதமர் ஏரியல் ஹென்ரியை பதவி விலகும்படி குற்ற கும்பல் தலைவர்கள் கோரியுள்ளனர். பிரதமரை வெளியேற்ற முயற்சிக்கும் இந்தக் குழுக்கள் தலைநகர் போர்ட் அவு பிரின்ஸின் 80 வீதமான பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. நைரோபி சென்றிருக்கும் பிரதமர் கென்யா தலைமையிலான பன்னாட்டு பாதுகாப்பு படை ஒன்றை ஹெய்ட்டிக்கு வரழைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையிலேயே இந்தப் பதற்றம் வெடித்துள்ளது.

ஹெய்ட்டியில் குற்ற கும்பல்களின் வன்முறைகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கம் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT