Thursday, May 2, 2024
Home » கிழக்கு, ஊவா, பொலன்னறுவை, மாத்தளையில் சிறிதளவு மழை

கிழக்கு, ஊவா, பொலன்னறுவை, மாத்தளையில் சிறிதளவு மழை

- ஒரு சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை

by Rizwan Segu Mohideen
February 29, 2024 7:52 am 0 comment

– மலையகம் உள்ளிட்ட சில பகுதிகளில் பலமான காற்று

இன்றையதினம் (29) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களிலும் சிறிய அளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ. வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT