ரஷ்யாவின் படையெடுப்பினால் 31,000 உக்ரைனிய துருப்புகள் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
எனினும் ரஷ்யாவின் இராணுவ திட்டத்திற்கு உதவக் கூடும் என்பதால் காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கையை கூறப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் வழக்கமாக கொல்லப்பட்ட படை வீரர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையை வெளியிடுவதில்லை என்பதோடு அது தொடர்பில் மற்ற தரப்புகளின் கணிப்பு கூறப்படுவதை விடவும் அதிகமாகும்.
மேற்குலகின் உதவிகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் உயிரிழப்பு மற்றும் நிலங்களை இழப்பதற்கு காரணமாகி இருப்பதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்ட கணிப்பின்படி 70,000 உக்ரைனிய துருப்புகள் கொல்லப்பட்டிருப்பதோடு 120,000 பேர் காயமடைந்துள்ளனர்.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போருக்கு தற்போது இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உக்ரைனுக்குத் தேவையானவற்றை மேற்கத்திய நட்பு நாடுகள் வழங்கினால், உக்ரைன் வெற்றி பெறும் சாத்தியம் இருப்பதாய் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகிறார்.
உக்ரேனுக்கு மேலும் 60 பில்லியன் டொலர் உதவியை வழங்க அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.