ஊவா மாகாண சபையின் மாகாண பயணிகள் போக்குவரத்து சேவை அதிகாரசபையினால் நீண்டதூர தனியார் பேருந்து போக்குவரத்து வசதிக்காக ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து சேவை அதிகார சபையின் தலைவர் சுசில் குமார தலைமையில் ஆசனமுன்பதிவு நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
பதுளையில் இருந்து தூர இடங்களான கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, அநுராதபுரம், கட்டுநாயக்க போன்ற பிரதேசங்களுக்கு தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் தேவைக்காகவே இது ஆம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதுளையிலிருந்து தூர இடங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாசன முற்பதிவு நிலையம் பிரயாணிகளுக்கு வரப்பிரசாதமாகும் எனவும் ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து சேவை அதிகார சபையின் தலைவர் சுசில் குமார தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து சேவை அதிகார சபையின் பொதுமுகாமையாளர் நவரத்ன பண்டார, மாவட்ட முகாமையாளர் வசந்த ஜயலத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எம்.ஏ. எம்.ஹசனார்
(ஊவா சுழற்சி நிருபர்)