281
மார்ச் 05 ஆம் திகதி கொழும்பில்
முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி இம்தியாஸ் பாக்கீர் மாக்காரினால் எழுதப்பட்டுள்ள ‘மகே கதாவ’ என்ற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி பி.ப 3.45 மணிக்கு கொழும்பு ஆனந்தா கல்லூரியின் குலரட்ன மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சர்வ மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், வெளிநாட்டு தூதுவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.