Sunday, May 19, 2024
Home » சென்னையில் அடுத்த மாதம் எடிசன் தமிழ்த்திரை விருதுவிழா

சென்னையில் அடுத்த மாதம் எடிசன் தமிழ்த்திரை விருதுவிழா

விழாக்குழுத் தலைவர் செல்வகுமார் ஏற்பாடு

by Gayan Abeykoon
February 15, 2024 6:02 pm 0 comment

எடிசன் திரை விருது வழங்கல் 16 ஆம் ஆண்டு நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது. தமிழ்த் திரைப்படங்களில் நடித்த சிறந்த நடிகருக்கான தெரிவுப் பட்டியலில் சிறந்த ஹீரோ வரிசையில் ரஜினிகாந்த், விஜய், அஜித், விஷால் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தற்போது தெரிவுப் பட்டியல் வரிசையில் விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, சிம்பு, ஜெயம் ரவி, ராகவா ​ேலாரன்ஸ், சித்தார்த் போன்றவர்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும் உலகத் தமிழர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களை தேர்ந்தெடுக்க வசதியாக எடிசன் எவோர்ட்ஸ் செயலி மற்றும் www.edisonawards.in என்ற வலைதளம் மூலமாகவும் வாக்குகளைச் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் அறியும் வகையில் தினசரி நாளேடு பண்பலை சமூக ஊடகங்கள் மூலமாகவும் விளம்பரம் செய்யப்பட்டு வாக்குகளை பெற்று வருவதாக எடிசன் விருது குழுத் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.   மேலும், தமிழ் ரசிகர்கள் தாங்கள் வாக்களித்த நடிகர், நடிகைகளை எடிசன் விருதில் ரெட் கார்பெட்டில் நடக்கும் நிகழ்வுகளை உலகத் தமிழர்கள் அறியும் விதத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள சமூக ஊடகங்கள் IPTV கள் மூலமாக காணும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் +6016 6167708 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT