Thursday, May 16, 2024
Home » SLvAFG; 3rd ODI: 7 விக்கெட்டுகாலாள் வெற்றி; சொந்த மண்ணில் இலங்கை சாதனைஅணி

SLvAFG; 3rd ODI: 7 விக்கெட்டுகாலாள் வெற்றி; சொந்த மண்ணில் இலங்கை சாதனைஅணி

- 3-0 என ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது

by Prashahini
February 14, 2024 9:53 pm 0 comment

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே இன்று (14) நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அந்த வகையில் 3 போட்டிகளைக் கொண்ட தொடரை 3 – 0 என முழுமையாக கைப்பற்றியுள்ளது.

இவ்வாறு சர்வதேச கிரிக்கெட் தொடர் ஒன்றை இலங்கை அணி முழுமையாக வெல்வது 2020 இற்கு பின்னர் இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிக பட்சமாக ரஹ்மத் ஷா 65 ஓட்டங்களையும், அஸ்மதுல்லாஹ் ஒமர்சாய் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் பிரமோத் மதுஷான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில், 267 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 35.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 267 என்ற வெற்றி இலக்கை அடைந்தது.

Image

இலங்கை அணி சார்பாக அதிகப்பட்சமாக பெத்தும் நிஸ்ஸங்க 118 ஓட்டங்களையும், அவிஷ்க பெனாண்டோ 91 ஓட்டங்களையும் பெற்றனர்.

தன்னுடைய 5ஆவது சர்வதேச ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்த பெத்தும் நிஸ்ஸங்க, 52 சர்வதேச ஒரு நாள் (ODI) போட்டிகளில் 2,000 ஓட்டங்களை மிக வேகமாக கடந்த இலங்கை வீரர் எனும் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

  • P Nissanka – 52 innings
  • U Tharanga – 63 innings
  • R Arnold – 66 innings
  • M Attapattu – 67 innings
  • L Thirimanne – 72 innings

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக கைஸ் அஹமட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் பெத்தும் நிஸ்ஸங்க தெரிவானார்.

Image

Afghanistan  (50 ovs maximum)
BATTING R B M 4s 6s SR
b Dananjaya 48 57 74 6 1 84.21
run out (WIA Fernando) 13 10 21 3 0 130.00
lbw b Wellalage 65 77 104 7 1 84.41
c Nissanka b Dananjaya 5 8 9 0 0 62.50
b AM Fernando 54 59 97 4 0 91.52
b Wellalage 32 38 36 2 1 84.21
c Samarawickrama b Pramod Madushan 14 21 30 0 1 66.66
c Asalanka b Pramod Madushan 4 9 8 0 0 44.44
c Samarawickrama b Pramod Madushan 11 4 12 1 1 275.00
b AM Fernando 5 5 4 1 0 100.00
not out 0 3 4 0 0 0.00
Extras (lb 5, nb 1, w 9) 15
TOTAL 48.2 Ov (RR: 5.50) 266
Fall of wickets: 1-39 (Ibrahim Zadran, 4.3 ov), 2-96 (Rahmanullah Gurbaz, 17.2 ov), 3-108 (Hashmatullah Shahidi, 19.6 ov), 4-166 (Rahmat Shah, 29.5 ov), 5-223 (Ikram Alikhil, 39.5 ov), 6-237 (Azmatullah Omarzai, 44.2 ov), 7-250 (Sharafuddin Ashraf, 46.1 ov), 8-255 (Mohammad Nabi, 46.4 ov), 9-260 (Fareed Ahmad, 47.3 ov), 10-266 (Qais Ahmad, 48.2 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
6 0 52 0 8.66 14 8 0 4 1
8.2 0 45 3 5.40 29 4 2 2 0
9 0 44 2 4.88 31 3 2 0 0
10 0 38 2 3.80 33 3 0 0 0
2 0 11 0 5.50 4 1 0 0 0
10 0 54 2 5.40 27 4 1 2 0
3 0 17 0 5.66 4 1 0 0 0
Sri Lanka  (T: 267 runs from 50 ovs)
BATTING R B M 4s 6s SR
c Mohammad Nabi b Qais Ahmad 118 101 136 16 2 116.83
c Sharafuddin Ashraf b Qais Ahmad 91 66 96 10 5 137.87
b Mohammad Nabi 40 29 36 0 4 137.93
not out 8 5 11 1 0 160.00
not out 7 13 8 0 0 53.84
Extras (nb 2, w 1) 3
TOTAL 35.2 Ov (RR: 7.55) 267/3

Did not bat: 

Fall of wickets: 1-173 (Avishka Fernando, 22.6 ov), 2-251 (Kusal Mendis, 31.6 ov), 3-253 (Pathum Nissanka, 32.3 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
5 0 54 0 10.80 14 5 4 1 0
4 0 29 0 7.25 14 6 0 0 0
6 0 47 0 7.83 15 4 2 0 1
4 0 45 0 11.25 9 4 3 0 1
9.2 0 46 1 4.92 29 3 1 0 0
7 0 46 2 6.57 18 5 1 0 0

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT